இந்திய கலாச்சாரம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் துளசி ஒரு மதிப்புமிக்க இடத்தை வகிக்கிறது. இதற்கு மதம் சார்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு இந்த சக்திவாய்ந்த மூலிகை அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக பாரம்பரிய மருந்துகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. துளசியின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் துளசி டீ, அதன் இதமளிக்கும் பண்புகள் மற்றும் சிகிச்சையளிக்கும் ஆற்றலுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை மருந்தாகும்.

Tulsi tea 3


துளசி டீயின் பலன்கள், அதன் ஊட்டச்சத்து விவரம் அதனுடன் இருமல் மற்றும் சளியை குணப்படுத்துவதில் அதன் செயல்திறன் ஆகியவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

துளசி செடி

புனிதமான செடியான துளசி, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இது 'மூலிகைகளின் ராணி' என்று புகழப்படுகிறது. துளசி 5000 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பயன்பாட்டிற்காகப் பயிரிடப்படுகின்றன. துளசி டீயின் குணப்படுத்தும் சக்தி மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்வை அளிப்பதோடு, ஊட்டச்சத்துக்களைப் பெறவும் உதவுகிறது.

துளசி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது மற்றும் லேசான இனிப்பு சுவையுடன் தயாரிக்கப்படும் இந்தத் தனித்துவமான மூலிகை தேநீர் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இப்போதே, ஒரு கப் ஆரோக்கியமான தேநீரை தயாரித்து பருகுங்கள்.

துளசி டீயின் ஊட்டச்சத்து விவரம்

துளசி டீயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவையாவன:

  • வைட்டமின்கள்: துளசி டீயில் வைட்டமின்கள் A மற்றும் C உள்ளன, அவை ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு, சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம்.
  • தாதுக்கள்: துளசி டீயில் கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் அடர்த்தியாக உள்ளன, அவை எலும்பு ஆரோக்கியம், ஆக்ஸிஜன் ஓட்டம் மற்றும் நோயெதிர்ப்பு சக்திக்கு அவசியம்.
  • பைட்டோ கெமிக்கல்கள்: யூஜெனோல், உர்சோலிக் அமிலம் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் நிரம்பிய துளசி டீ, சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்துகிறது.

சளி/இருமலை எதிர்த்துப் போராட துளசி எவ்வாறு உதவுகிறது?

துளசி என்பது அமிர்தமாகும், மேலும் துளசியில் இருந்து காய்ச்சப்படும் தேநீர் இருமல் மற்றும் சளியை குணப்படுத்துவதில் அதன் சக்திவாய்ந்த செயல்பாடுகளுக்காக மிகவும் புகழ்பெற்றது. அது எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கே கொடுத்துள்ளோம்:

நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகள்

யூஜெனோல், சினியோல் மற்றும் கற்பூரம் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்த துளசி டீ, சுவாசக்குழாய் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும் சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது.

கோழையகற்றும் செயல்பாடு

துளசி டீ ஒரு கோழையகற்றியாக (Expectorant) செயல்படுகிறது, சளியை தளர்த்தி, சுவாசக் குழாயில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது, இதன் மூலம் நெஞ்சில் உள்ள சளி அடைப்பை எளிதாக்கி, சுவாசிக்க உதவுகிறது.

தொண்டை வலியை ஆற்றுகிறது

துளசி டீயின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை வலியை ஆற்றி, இருமலால் ஏற்படும் எரிச்சல், அழற்சி மற்றும் வலியை குறைக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது

துளசி டீயில் உள்ள சக்திவாய்ந்த உயிரியல் ரீதியாக செயல்படும் கலவைகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. எனவே, துளசி டீயை தொடர்ந்து குடிப்பதால், சளி மற்றும் இருமலில் இருந்து வேகமாக மீண்டு வர உதவுகிறது. கூடுதலாக, ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளடக்கமும் உடலின் பாதுகாப்பு வழிமுறைகளை ஆதரித்து, உங்களை ஆரோக்கியமாகவும் நோய் இல்லாமலும் வைத்திருக்கும்.

காய்ச்சலை எதிர்த்துப் போராடுகிறது

துளசி டீயின் இயற்கையான பண்புகள், சளி மற்றும் காய்ச்சலுடன் தொடர்புடைய ஒரு பொதுவான அறிகுறியான காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது.

Tulsi tea 4


துளசி டீ தயாரிப்பது எப்படி?

இந்த புத்துணர்ச்சியூட்டும் தேநீரை காய்ச்சுவது ஒரு எளிய செயல்முறையாகும், மேலும் இதனை புதிய அல்லது உலர்ந்த துளசி இலைகளைப் பயன்படுத்தி செய்யலாம்:

தேவையான பொருட்கள்:

  • 1 கப் தண்ணீர்
  • 1 தேக்கரண்டி உலர்ந்த துளசி இலைகள் அல்லது ஒரு சில ஃப்ரெஷ்ஷான துளசி இலைகள்
  • தேவையான அளவு தேன் அல்லது எலுமிச்சை (விரும்பினால்)

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  2. கொதிக்கும் நீரில் துளசி இலைகளை சேர்க்கவும்.
  3. 5-10 நிமிடங்கள் இலேசான தீயில் கொதிக்க விடவும்.
  4. தேநீரை ஒரு கோப்பையில் வடிகட்டவும்.
  5. கூடுதல் சுவை மற்றும் நன்மைகளுக்காக விரும்பினால் தேன் அல்லது எலுமிச்சை சேர்க்கவும்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது துளசி டீயை எவ்வளவு அடிக்கடி குடிக்க வேண்டும்?

அதிகமானோர் இருமல் மற்றும் சளி இருக்கும்போது நிவாரணம் பெறவும், நீர்ச்சத்தை பராமரிக்கவும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை துளசி டீயைக் குடிக்கலாம்.

துளசி டீ குடிப்பதால் ஏதேனும் பக்கவிளைவுகள் உண்டா?

துளசி டீ பொதுவாக பாதுகாப்பானது, ஆனால் அதை அதிகமாக குடிப்பதால் சிலருக்கு இலேசான குமட்டல் அல்லது செரிமான அசௌகரியம் ஏற்படலாம். கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள் அதை உட்கொள்ளும் முன் தவறாமல் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும்.

அதிகபட்ச நன்மைகளுக்கு துளசி டீயை எப்படி காய்ச்சுவது?

தண்ணீரைக் கொதிக்க வைத்து, புதிய அல்லது உலர்ந்த துளசி இலைகளைச் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வடிகட்டி, சூடாகப் பருகவும்.

முடிவுரை

துளசி டீ ஒரு குறிப்பிடத்தக்க மூலிகை பானம் ஆகும், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பது முதல் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் செரிமானத்திற்கு உதவுவது வரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதன் செறிவான ஊட்டச்சத்து விவரம் மற்றும் சக்திவாய்ந்த மருத்துவப் பண்புகள் ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. குறிப்பாக, இருமல் மற்றும் சளியைப் போக்கும் அதன் திறன், குளிர் காலத்தில் ஒரு மதிப்புமிக்க தீர்வாக அமைகிறது. நீங்கள் எண்ணற்ற நன்மைகளை அனுபவிக்கவும், உங்கள் ஆரோக்கியத்தை இயற்கையாக ஆதரிக்கவும் துளசி டீயை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.