ஆளிவிதை சக்திவாய்ந்த, பல்வகை பயன்பாடுகளைக் கொண்ட பொருளாகும். இது எந்த உணவிலும் சுவையையும் அமைப்பையும் உயர்த்தும் தன்மையுடையது. மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்த இந்தத் தங்க நிற விதைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இந்த விதைகள் ஹிந்தியில் அல்சி என அழைக்கப்படுகின்றன. ஆயுர்வேத மற்றும் நவீன மருத்துவத்தில் அவற்றின் மருத்துவ பண்புகளுக்காக ஆளிவிதைகள் பெரும் மதிப்பு பெறுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு, ஹார்மோன் சமநிலை, இதய ஆரோக்கியம், மற்றும் சரும அழகை மேம்படுத்துவது உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கின்றன.

Flaxseeds-for-women_1200x450


பெண்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தில் ஆளிவிதைகள் வழங்கும் நன்மைகள் என்ன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

ஆளிவிதைகள் என்றால் என்ன?

ஆளிவிதைகள் உலகில் முதலில் பயிரிடப்பட்ட பயிர்களில் ஒன்றாகும். இவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நாரச்சத்து, மற்றும் லிக்னான்கள் (lignans) எனப்படும் தாவரச் சேர்மங்கள் நிறைந்தவை. இச்சேர்மங்கள் ஈஸ்ட்ரஜன் ஹார்மோனின் செயல்பாட்டை ஒத்ததாக இருந்து பெண்களின் ஹார்மோன் சமநிலையைப் பேணுகின்றன. ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம், வறுத்து, பொடியாக அல்லது எண்ணெயாக எடுத்துக்கொள்ளலாம்.

1 மேசைக்கரண்டி (15 கிராம்) ஆளிவிதைகளின் ஊட்டச்சத்து மதிப்பு

  • கலோரி: 55 kcal
  • புரதம்: 1.9 கிராம்
  • கொழுப்பு: 4.3 கிராம் (பெரும்பாலும் ஆரோக்கியமான ஓமெகா-3)
  • கார்போஹைட்ரேட்டுகள்: 3 கிராம்
  • நார்ச்சத்து: 2.8 கிராம்
  • கால்சியம்: 25 மி.கி
  • மெக்னீசியம்: 40 மி.கி
  • லிக்னான்கள்: தாவர உணவுகளில் மிக உயர்ந்த அளவு

ஆரோக்கிய நன்மைகள்

ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்

ஆளிவிதைகளில் உள்ள இயற்கை பைடோஈஸ்ட்ரஜன்கள் (லிக்னான்கள்) ஈஸ்ட்ரஜன் ஹார்மோனின் அளவை சமநிலைப்படுத்த உதவுகின்றன. இது மாதவிடாய் வலி, மாதவிடாய் நிறுத்த அறிகுறிகள், திடீரென்று ஏற்படும் உடல் வெப்பம் போன்றவற்றை குறைத்து, மெனோபாஸ் நிலையிலுள்ள பெண்களுக்கு ஆரோக்கிய நன்மையை வழங்குகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

ஓமெகா-3 கொழுப்பு அமிலங்களும் நார்ச்சத்தும் சேர்ந்து கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இதய நோய்களின் அபாயத்தை குறைக்க இது சிறந்தது.

சரும மற்றும் முடி ஆரோக்கியம்

வைட்டமின் E மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் சருமத்தை மிருதுவாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்கின்றன. உலர் சருமம், முகப்பரு, முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளை தடுக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

ஆளிவிதைகளில் உள்ள உயர் அளவு கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. இது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் செரிமான பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.

எடை மேலாண்மை

நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்ததால் பசியைக் கட்டுப்படுத்தி, அதிக உணவு ஆசையைத் தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, கொழுப்பு சேர்வதைத் தடுப்பதன் மூலம் ஆரோக்கியமான எடையைப் பேணுகிறது.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்

பல ஆய்வுகள் லிக்னான்கள் ஈஸ்ட்ரஜன் செயல்பாட்டை தணிக்கும் தன்மையுடையதாக இருப்பதையும், அது மார்பகப் புற்றுநோய் அபாயத்தை குறைக்கக்கூடும் என்பதையும் நிரூபித்துள்ளன.


for 

Bloating, gas, or loose stools due to high fiber content.


மெனோபாஸ் நிலையிலுள்ள பெண்களுக்கு ஆதரவு

ஆளிவிதைகள் மெனோபாஸின்போது ஏற்படும் அசௌகரியங்களை குறைத்து, எலும்பு அடர்த்தியைப் பேணுகின்றன. இதனால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு மெலிதல் அபாயம் குறைகிறது.

ஆளிவிதைகளை உணவில் சேர்ப்பது எப்படி?

பொடியாக அரைத்த ஆளிவிதைகளைக் கீழ்க்கண்டவற்றில் சேர்க்கலாம்:

  • ஸ்மூத்தி, யோகர்ட், யோகர்ட், காலை உணவு சீரியல் அல்லது ஓட்ஸ்
  • கோதுமை மாவில் சேர்த்து சப்பாத்தி தயாரிக்கலாம்
  • சூப், குழம்பு அல்லது சாலட் மீது தூவலாம்

ஆளிவிதை எண்ணெய்:

  • சாலட் டிரெசிங்காக பயன்படுத்தலாம் (சூடுப்படுத்த வேண்டாம்).

ஆளிவிதை பொடி:

  • காலை வெந்நீர் அல்லது பாலில் 1 தேக்கரண்டி சேர்த்து குடிக்கலாம்.

ஆளிவிதை ஜெல்:

பரிந்துரைக்கப்படும் தினசரி அளவு

பொடியாக அரைத்து 1–2 டேபிள் ஸ்பூன் (10–20 கிராம்) வரை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது.

பக்கவிளைவுகள்

பொதுவாக ஆளிவிதைகள் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பானவை. இருப்பினும் அதிக அளவில் எடுத்துக்கொண்டால்:

  • வயிற்றுப்புண், உப்பிசம் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம் (அதிக நார் காரணமாக)
  • ஹார்மோனில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டு
  • மூல வடிவில் அதிகம் எடுத்தால் தைராய்டு செயல்பாட்டைத் தடுக்கும்
  • கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்

சிறந்த குறிப்பு: ஆளிவிதைகளை எடுத்துக்கொள்ளும் போது போதுமான தண்ணீர் குடிக்கவும். இது செரிமானத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.

முடிவுரை

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த “சூப்பர் உணவாக” ஆளிவிதைகள் விளங்குகின்றன. ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, இதய மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானத்தையும் சீராக வைக்க உதவுகின்றன. சிறிய அளவில் தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதன் பல நன்மைகளைப் பெறலாம்.